/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும்'
/
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும்'
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும்'
மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்க வேண்டும்'
ADDED : ஜூன் 18, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, ''தமிழக, 'மா' விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 30,000 ரூபாய் நஷ்டஈடாக அரசு வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 'மா' விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க மனு அளித்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் பிரதான தொழிலாக, 'மா' சாகுபடி உள்ளது. மாவட்டத்தில், 35,000 ஹெக்டேரில், 'மா' சாகுபடி நடக்கிறது. நடப்பாண்டில் நல்ல விளைச்சல் இருந்தும், 'மா'விற்கு சரியான விலை இல்லாமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாங்கூழ் தொழிற்சாலைகள், ஏற்கனவே இருப்பிலுள்ள மாங்கூழை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கொடுக்க மறுக்கிறது. இது குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி, ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
ஆந்திராவில் இப்பிரச்னைக்கு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாக தீர்வு கண்டுள்ளார். 'மா' டன்னுக்கு, 12,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அதில், 8 ரூபாய் தொழிற்சாலைகளும், 4 ரூபாய் அரசு மான்யமாகவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, 5 சதவீதமாக குறைக்க, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் நம் மாநில முதல்வரோ, அமைச்சரோ ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.
இதை கண்டித்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஒப்புதலோடு விரைவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளோம். முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா விவசாயிகளின் பாதிப்புகளுக்கு, ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. அதுபோல, 'மா' விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 30,000 ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும். 'மா'விற்கு தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.