/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் கொடுத்த தொல்லை, கொஞ்ச நஞ்சமில்லை'
/
'அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் கொடுத்த தொல்லை, கொஞ்ச நஞ்சமில்லை'
'அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் கொடுத்த தொல்லை, கொஞ்ச நஞ்சமில்லை'
'அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் கொடுத்த தொல்லை, கொஞ்ச நஞ்சமில்லை'
ADDED : ஆக 13, 2025 05:29 AM
ஊத்தங்கரை: ''அ.தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் கொடுத்த தொல்லை, கொஞ்ச நஞ்சமில்லை,'' என,
இ.பி.எஸ்., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணம் மேற்-கொண்ட, அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதா-வது:
கரும்பு தோட்டத்தில் போஸ் கொடுக்கும் ஸ்டாலின் போல அல்ல நான். எப்படி விவசாய வேலை செய்வேன் என விசாரி-யுங்கள். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், ஸ்டாலின் கொடுத்த தொல்லை, கொஞ்ச நஞ்சமில்லை. பெரும்பான்மை நிரூபிக்க, கவர்னர் அழைக்கிறார்.
அப்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிரிலுள்ள மேசையில் நின்று நடனமாடியும், சட்டசபைக்கு வெளியில் சட்-டையை கிழித்தும் நாடகமாடினர். ஆர்.எஸ்.பாரதி, என் மீது, 1,500 கோடி ரூபாய் ஊழல் உள்ளது, துாசி தட்டுவோம் என்-கிறார். வேண்டுமானால் சொல்லுங்கள், நாங்கள் வந்து துாசி தட்-டுகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பய-மில்லை. தொண்டர் படையோடு உங்களை வெல்வோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல, அவருக்கு பின்னால், 100 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க., வலுவோடு இருக்கும். எங்கள் ஆட்சியில் தான் அனைத்து தரப்பு மக்களும், செழிப்பாக இருந்தார்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முனிவெங்கடப்பன், கிழக்கு ஒன்றிய செய-லாளர் கண்ணியப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், பர்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், காவேரிப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன், அமைப்புசாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் ஆஜி, முன்னாள் எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் சரவணன், நகரமன்ற உறுப்பினர் எழிலரசி சரவணன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.