ADDED : அக் 20, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, அக். 20-
பர்கூர் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர், 16 வயது சிறுமி. கடந்த, 16ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து சிறுமியின் தாய் பர்கூர் போலீசில் புகாரளித்தார். அதில் பர்கூர் அடுத்த ஒப்பத்தவாடியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
போச்சம்பள்ளி அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லுாரி மாணவி, 17 வயது சிறுமி. கடந்த, 17ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் போச்சம்பள்ளி போலீசில் புகாரளித்தார். அதில், காவேரிபட்டணத்தை சேர்ந்த குணா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.