/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'வரும் தேர்தல் அ.தி.மு.க.,விற்கு வாழ்வா, சாவா தேர்தல்'
/
'வரும் தேர்தல் அ.தி.மு.க.,விற்கு வாழ்வா, சாவா தேர்தல்'
'வரும் தேர்தல் அ.தி.மு.க.,விற்கு வாழ்வா, சாவா தேர்தல்'
'வரும் தேர்தல் அ.தி.மு.க.,விற்கு வாழ்வா, சாவா தேர்தல்'
ADDED : ஏப் 19, 2025 01:46 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கட்டிகானப்பள்ளியில், ஓட்டுச்சாவடி கிளை அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் அரசு அலுவலர்களை அடிமைபோல் நடத்துகின்றனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொண்டு வருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டனர். எனவே அரசு அலுவலர்களிடம் பேசி, 4 ஆண்டு இன்னல்களை சொல்லி மனதை மாற்ற வேண்டும். 2026ல் அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் முக்கியமான தேர்தல். உயர்கல்வி அமைச்சர் தான்தோன்றித்தனமாக பேசுகிறார். அவர் பேசிய பேச்சுக்கு இன்னும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கவில்லை.
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படிப்பட்டவரை ஜெயிலில் போட்டிருப்பார். ஆனால், நீதிமன்றம் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்ல வேண்டும். வரும் தேர்தல் அ.தி.மு.க.,விற்கு வாழ்வா, சாவா தேர்தல். எனவே தொண்டர்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட்டு நாம் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.