/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்த வாலிபர் உற்சாக வரவேற்பு அளித்த மலை கிராம மக்கள்
/
அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்த வாலிபர் உற்சாக வரவேற்பு அளித்த மலை கிராம மக்கள்
அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்த வாலிபர் உற்சாக வரவேற்பு அளித்த மலை கிராம மக்கள்
அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்த வாலிபர் உற்சாக வரவேற்பு அளித்த மலை கிராம மக்கள்
ADDED : ஜூன் 15, 2025 02:11 AM
அஞ்செட்டி, அஞ்செட்டி அருகே, ராணுவ படை பிரிவான அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்த வாலிபருக்கு, மலை கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த மாடக்கல் அருகே, உளிபெண்டா மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நரசிம்மய்யா. இவருக்கு அனில்குமார், 23, பிரேம்குமார், 22, முரளி, 20, என மூன்று மகன்கள் உள்ளனர். திருப்பத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில், கடந்தாண்டு முரளி பி.காம்., சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார். அப்போது, ராணுவ படை பிரிவான அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பித்து, கடந்தாண்டு அக்., 23ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் கடந்த நவம்பர் முதல், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதை முடித்து கொண்டு கடந்த, 6ம் தேதி ஊருக்கு திரும்பினார். தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் முரளிக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. உளிபெண்டா கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் இருந்து, எவரும் அரசு பணிக்கு செல்லவில்லை என, கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதனால் அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி முடித்து, ஊருக்கு திரும்பி வந்த முரளிக்கு, கிராம மக்கள் சார்பில் பேனர் வைத்து நேற்று முன்தினம் மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக, மேள தாளங்கள் முழங்க மாலை அணிவித்து
உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து முரளி கூறுகையில்,'' அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
எனது விடுபட்ட படிப்பை தொடர்வேன். எங்கள் கிராமத்தில் இருந்து யாரும் அரசு பணியில் இல்லை. நான் பணியில் சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.