ADDED : அக் 14, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் தாலுகா தொட்டிகொல்லப்பள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன், 30. பெங்களூருவில் பேக்கரி கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கடந்த, 11ல் இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு கரடிகொல்லஹள்ளியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 12 காலை, பெங்களூருவில் இருந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த, 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. மணிகண்டன் புகார் படி, பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.