/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
ADDED : நவ 16, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் கண்ணாடியை
உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
கிருஷ்ணகிரி, நவ. 16-
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் பலமனேரி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார், 42, கோவில் பூசாரி. இவர் தன் உறவினருடன் நேற்று மாலை, வேப்பனஹள்ளிக்கு காரில் வந்துள்ளார். அங்குள்ள வங்கியில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாயை எடுத்து காரில் வைத்துள்ளனர். காரை வேப்பனஹள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நிறுத்திவிட்டு, நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கார் கண்ணாடியை உடைத்து, இரண்டு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, மோகன்குமார் அளித்த புகார்படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.