/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொருட்கள் வாங்க விருப்பமற்றவர்கள் பொருளில்லா ரேஷன் கார்டு பெறலாம்
/
பொருட்கள் வாங்க விருப்பமற்றவர்கள் பொருளில்லா ரேஷன் கார்டு பெறலாம்
பொருட்கள் வாங்க விருப்பமற்றவர்கள் பொருளில்லா ரேஷன் கார்டு பெறலாம்
பொருட்கள் வாங்க விருப்பமற்றவர்கள் பொருளில்லா ரேஷன் கார்டு பெறலாம்
ADDED : ஜூலை 22, 2025 01:44 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரேஷன் கடைகளில், ரேஷன் பொருட்கள் பெறாதவர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனும் ரேஷன் அட்டைதாரர்கள், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் வலைதளம் (www.tnpds.gov.in) மூலம், பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.
எனவே, விருப்பமுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் விளிம்பு நிலை மக்கள் பயன்பெற ஏதுவாக, உரிமத்தை விட்டுக்கொடுக்க முன்வரலாம். ரேஷன் அட்டை பதிவு, குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களின் பதிவுகள், குடிமை பொருள் வழங்கல், புள்ளி விபர தரவின் பதிவு தொடர்ந்து இருக்கும். இதனால், அவர்களுக்கான அனைத்து ஏனைய நடைமுறைகளுக்கு தடை ஏதும் இருக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.