/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லாரி டிரைவர் உள்பட இருவரை தாக்கி வழிப்பறி; மூவர் கைது
/
லாரி டிரைவர் உள்பட இருவரை தாக்கி வழிப்பறி; மூவர் கைது
லாரி டிரைவர் உள்பட இருவரை தாக்கி வழிப்பறி; மூவர் கைது
லாரி டிரைவர் உள்பட இருவரை தாக்கி வழிப்பறி; மூவர் கைது
ADDED : மே 24, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே, லாரி டிரைவர் உள்பட இருவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பெங்களூருவுக்கு கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு கடந்த, 21ல், லாரி சென்றுள்ளது. லாரியை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த வெங்கடேஷ் ஓட்டி வந்தார். பர்கூர் அடுத்த ஒரப்பம் அருகில் சென்றபோது, டீசல் காலியாகி லாரி நின்றுள்ளது. வெங்கடேஷ் கேன் எடுத்துக் கொண்டு டீசல் வாங்க சென்றார். அப்போது, இரு வாலிபர்கள் பைக்கில் வந்து, பெட்ரோல் பங்க்கில் விடுவதாக கூறி அவரை ஏற்றி சென்றனர்.
கிருஷ்ணகிரி அருகே, போகனப்பள்ளி கூட் ரோடு அருகே அழைத்து சென்று அவரை தாக்கி, 'ஜி.பே.,' மூலம் 3,000 ரூபாய் தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பிக் கொண்டு, மொபைலையும் பறித்து சென்றனர். இது குறித்து வெங்கடேஷ் கந்திகுப்பம் போலீசில் புகாரளித்தார்.
நேற்று முன்தினம் இரவு மல்லப்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 58, என்பவர் காரகுப்பத்தில் இருந்து பர்கூர் நோக்கி ஸ்கூட்டரில் சென்றுள்ளார். காரகுப்பம் மேம்பாலம் பக்கமாக சென்ற போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி ஸ்கூட்டரை பறிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் கூடியதால், இருவரும் தப்பி சென்றனர். இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி பர்கூர் போலீசில் புகார் அளித்தார்.
பர்கூர் அடுத்த சின்னபர்கூரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த மூவரை பிடித்தனர். விசாரணையில், லாரி டிரைவர் வெங்கடேஷிடம் பணம் பறித்ததும், ஸ்கூட்டரில் வந்த கிருஷ்ணமூர்த்தியை மிரட்டியதும் அவர்கள் தான் என தெரிந்தது. இதையடுத்து பைக்கில் வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த காதர்பாஷா, 19, தினகரன், 22, மற்றும், 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.