/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயி மீது தாக்குதல் நடத்திய மூவருக்கு வலை
/
விவசாயி மீது தாக்குதல் நடத்திய மூவருக்கு வலை
ADDED : அக் 15, 2025 01:14 AM
கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 64, விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் காசி, 67. உறவினர்களான இவர்களுக்கு, பொதுவாக ஒரு விவசாய கிணறு உள்ளது.
கடந்த, 3ல், தன் நிலத்திற்கு நீர் பாய்ச்ச கிணற்றிலுள்ள பம்ப் செட்டை ஆறுமுகம் இயக்கினார். அப்போது அங்கு வந்த காசி, 67 பம்ப் செட்டை இயக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதில் ஏற்பட்ட பிரச்னையில் அறுமுகத்தை, காசி, அவரது மனைவி விர்தம்மாள், 60, மகன் செல்வகுமார், 40, ஆகியோர் சேர்ந்து தாக்கினர். இதில், ஆறுமுகத்தின் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, மூன்று பேர் மீதும் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.