/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மூவர் கைது
/
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மூவர் கைது
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மூவர் கைது
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மூவர் கைது
ADDED : டிச 19, 2025 06:51 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஜெகதேவி சாலையை சேர்ந்தவர் பிரபு, 34, ஸ்வீட் மாஸ்டர். இவரது மனைவி மாளவிகா, 30. இருவரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தங்கி ஒரு பேக்கரியில் பணியாற்றுகின்றனர். ஜெகதேவியி-லுள்ள வீட்டில் தனியாக உள்ள, பிரபுவின் தாய் ஜெயா, 65, கடந்த, 4ல், வீட்டருகே உள்ள விவசாய நிலத்தில் பணியாற்ற ஜெயா சென்றுள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீரோவிலிருந்த, 5 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுவை திருடிச்சென்றனர். ஜெயா புகார் படி, பர்கூர் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' காட்சிகள் மற்றும் கைரேகைகளை வைத்து திருட்டில் ஈடுபட்டது, பழைய குற்றவா-ளிகளான கிருஷ்ணகிரி அடுத்த பீர்ஜேப்பள்ளியை சேர்ந்த ராஜா, 55, வேலுார், சிலுவன்பேட்டை சசி-குமார், 47, சென்னை அம்பத்துார் ரமேஷ், 56 ஆகியோர் என தெரிந்தது.அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்ற மூவ-ரையும், போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

