/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலி மதுபாட்டில் திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : டிச 19, 2025 06:51 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கில், நேற்று டாஸ்மாக் சங்-கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், உள்-ளிருப்பு போராட்டம் நடந்தது.
டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'டாஸ் மாக் கடைகளில் உள்ள பாட்டில்களில், 10 ரூபாய் ஸ்டிக்கர் ஓட்ட இன்று(நேற்று) ஸ்டிக்கர்-களும், கணக்கு பதிவேடுகளும் வழங்க இருந்-தனர். இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது. காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு முறையான செயல்முறையை டாஸ்மாக் நிர்வாகம் உருவாக்காமல் கடை ஊழி-யர்களிடம் திணித்துள்ளது. ஏற்கனவே, வேலை சுமையால், கடுமையாக பாதித்துள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு, இது மேலும் கூடுதலான வேலை பளு திணிப்பதாக உள்ளது. மது பாட்டிலுக்கான தொகையோடு வசூலிக்கப்படும், 10 ரூபாயு-ம், திரும்பி வராத பாட்டிலுக்கான தொகையையும் டாஸ்மாக் எடுத்துக் கொள்கிறது. இதனால் ஊழி-யர்களும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கின் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்-டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்' என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், டாஸ்மாக் மேலாளர் செங்கிஸ்கான் மற்றும் அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம், 3:00 மணியளவில் போராட்டத்தை கைவிடப்பட்டது.