ADDED : ஜூலை 06, 2026 01:31 AM
ஓசூர்: ஓசூர் நகரில், போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், டிராபிக் வார்டன் என்ற பெயரில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பணி முடிந்த பின், தன் வீட்-டிற்கு டிராபிக் வார்டன் ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரிடம், 'லிப்ட்' கேட்டார். அவரும் ஏற்றிக்கொள்ள, சிறிது துாரம் சென்றபோது, பைக்கை ஓட்டி சென்ற நபர், டிராபிக் வார்டனிடம், 'கஞ்சா வேண்டுமா' என கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், அந்த நபரை பிடித்து, ஹட்கோ போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த ரவிக்-குமார், 38, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 16,500 ரூபாய் மதிப்புள்ள, 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஓசூர் காரப்பள்ளியில் ரோந்து சென்ற டவுன் ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், 15,000 ரூபாய் மதிப்புள்ள, அரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக, ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த பிரபாகரன், 23, ஓசூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே வெங்கடேஷ் நகரை சேர்ந்த முத்து, 19 ஆகிய
இருவரை நேற்று கைது செய்தனர்.
