/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூவர் விடுதலை
/
இருவேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூவர் விடுதலை
இருவேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூவர் விடுதலை
இருவேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூவர் விடுதலை
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த பூதிப்பட்டியை சேர்ந்தவர் மேஸ்திரி சரவணன், 45. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராமன், பெருமாள். நணபர்களான மூவரும், 2019, ஜூலை 29ல், கே.ஆர்.பி., அணை பின்புறம் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றுள்ளனர். அப்போது ராமன் இறந்துள்ளார். அவரை சரவணனும், பெருமாளும் சேர்ந்து கொன்றதாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.
நான்கரை ஆண்டுகளாக, கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி தாமோதரன் தன் தீர்ப்பில்,' குற்றம்சாட்டப்பட்ட சரவணன், பெருமாள் ஆகியோர் மீதான குற்றங்கள் அரசு தரப்பால் சரிவர நிரூபிக்கப்படாததால், இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்கிறேன்' என, உத்தரவிட்டார்.
* ஓசூர், ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் ஹேமலதா, 42. இவரது கணவர் கிருஷ்ணபிரசாத், பழக்கடை நடத்தியுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், ஹேமலாதவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், 2011, அக்., 23ல், கிருஷ்ணபிரசாத் வீட்டில் இறந்தார். அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் மனைவி ஹேமலதாவை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கிரு ஷ்ணகிரி முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி சுமதி சாய்பிரியா தன் தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட ஹேமலதா, தன் கணவனை கழுத்தை நெரித்து கொன்றதற்கான சாட்சியங்களை, அரசு தரப்பினர் சரிவர நிரூபிக்காததால் ஹேமலதாவை விடுதலை செய்து உத்தரவிட்டார். வழக்குகளில் வக்கீல்கள் தமிழ், குணசேகரன் ஆகியோர் ஆஜராகினர்.

