/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாடிப்படிக்கட்டுக்கு பங்காளி சண்டை ராணுவ வீரர் உள்பட மூவருக்கு வலை
/
மாடிப்படிக்கட்டுக்கு பங்காளி சண்டை ராணுவ வீரர் உள்பட மூவருக்கு வலை
மாடிப்படிக்கட்டுக்கு பங்காளி சண்டை ராணுவ வீரர் உள்பட மூவருக்கு வலை
மாடிப்படிக்கட்டுக்கு பங்காளி சண்டை ராணுவ வீரர் உள்பட மூவருக்கு வலை
ADDED : அக் 21, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த மாரப்பன் கொட்டாயை சேர்ந்தவர் நரசிம்மன்,64; விவசாயி. இவரது தம்பி பைரப்பன். பைரப்பனின் மகன் தினேஷ்குமார், 28, ராணுவத்தில் பணிபுரிகிறார். தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவர்களது வீடுகள் அருகருகில் உள்ளன. இருவரின் வீடுகளின் மொட்டை மாடிக்கு செல்ல பொதுவான ஒரே படிக்கட்டு மட்டும் உள்ளது.
இந்த மாடிப்படிக்கட்டு தங்களுக்கே சொந்தம் என இருதரப்பினரும் கூறியதால் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் நரசிம்மனை, பைரப்பன், அவரது மனைவி மீனாட்சி, 50, மற்றும் தினேஷ்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து தாக்கினர். தினேஷ்குமார் கல்லால் தாக்கியதில் நரசிம்மனின் மண்டை உடைந்தது. ஏற்கனவே இதயக்கோளாறுக்கு சிகிச்சை பெற்று வரும் அவர், படுகாயமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ராணுவ வீரர் தினேஷ்குமார் உள்பட மூவரையும் தேடி வருகின்றனர்.