/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு விபத்தில் மூன்று பேர் பலி
/
வெவ்வேறு விபத்தில் மூன்று பேர் பலி
ADDED : நவ 15, 2024 02:24 AM
வெவ்வேறு விபத்தில்
மூன்று பேர் பலி
ஓசூர், நவ. 15-
பர்கூர் அடுத்த ஓதிகுப்பத்தை சேர்ந்தவர் உதயகுமார் ராவ். 28. இவர், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில், மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த, 12 இரவு ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பல்சர் பைக்கில் சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
* பர்கூர் அடுத்த ஜெகதேவி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 17, கூலித்தொழிலாளி. இவர் பஜாஜ் பிளாட்டினா பைக்கில் கடந்த, 13ல் சென்றார். காலை, 7:30 மணியளவில் காமாட்சிபுரம் அருகில் பர்கூர் - ஜெகதேவி சாலை ஜெகதேவி அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற டாரஸ் லாரி மோதி பலியானார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஓசூர் ரயில்வே நிலைய சாலையை சேர்ந்தவர் அப்துல் முஸ்தாக், 40. டூவீலர் ஷோரூம் ஊழியர். கடந்த, 12ல், பி.செட்டிப்பள்ளி அருகே பஜாஜ் பிளாட்டினா பைக்கில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்து பலியானார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.