/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 பெண்கள் உட்பட மூன்று பேர் மாயம்
/
2 பெண்கள் உட்பட மூன்று பேர் மாயம்
ADDED : ஆக 18, 2025 02:19 AM
வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி முஸ்லிம்பூர் கிரா-மத்தை சேர்ந்தவர் முகமது உபேஷ், 21. தச்சு தொழிலாளி. கடந்த, 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது தந்தை முகமது ஷெரிப், 60, புகார் படி, வேப்ப-னஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர் உமாசங்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி மேனகா, 22. கடந்த, 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் புகாரில், ஓசூர் உமாசங்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.
பாரூர் அடுத்த பெரிய பரையூர் அருகே நாமகாரன் கொட்டாயை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மனைவி முனியம்மாள், 37. கடந்த, 14ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை சென்னப்பன், 62, புகார் படி, பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.