/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சாலை விபத்தில் பெண் உட்பட மூவர் பலி
/
வெவ்வேறு சாலை விபத்தில் பெண் உட்பட மூவர் பலி
ADDED : அக் 23, 2025 01:18 AM
ஓசூர், அக். 23
அஞ்செட்டி அருகே கோடியூரை சேர்ந்தவர் அலமேலு, 55. கூலித்தொழிலாளி; நேற்று முன்தினம் காலை, 8:45 மணிக்கு, ஓசூர் - பெங்களூரு சாலையில் நடந்து சென்றார். அப்போது ஹோண்டா பைக், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பலியானார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 65, கூலித்தொழிலாளி. கடந்த, 13ல், அரூரை சேர்ந்த வெங்கடேசன், 37 மற்றும் சென்னகேசவலு, 35 என்ற பெண்ணுடன் பஜாஜ் பிளாட்டினா பைக்கில் சென்றார்.
பைக்கை வெங்கடேசன் ஓட்டினார். இரவு, 8:--00 மணியளவில் ஒப்பதவாடி வனப்பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. படுகாயமடைந்த முருகேசன், தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த மங்கம்மாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 40, வேன் டிரைவர். இவர் கடந்த, 20 இரவு, மோட்டூர் அருகே கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில், டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சென்றார். முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியது. இதில்,
படுகாயமடைந்த ராஜேஷ்குமார் பலியானார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.