/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகரில் குவிந்த 30 டன் பட்டாசு குப்பை அகற்றம்
/
கிருஷ்ணகிரி நகரில் குவிந்த 30 டன் பட்டாசு குப்பை அகற்றம்
கிருஷ்ணகிரி நகரில் குவிந்த 30 டன் பட்டாசு குப்பை அகற்றம்
கிருஷ்ணகிரி நகரில் குவிந்த 30 டன் பட்டாசு குப்பை அகற்றம்
ADDED : அக் 23, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி நாடு முழுவதும் கடந்த, 20ல், தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளில் வெடிக்கப்பட்ட பாட்டாசுகளால், குப்பையும், பூஜை பொருட்களின் கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டன. குறிப்பாக தீபாவளி மற்றும் நேற்று முன்தினம், நோன்பு எடுப்பு நிகழ்ச்சி என, 2 நாட்கள் ஏராளமான பட்டாசு குப்பை தேங்கியருந்தன. ஏற்கனவே பட்டாசு குப்பைகளை தனியாகவும், வழக்கமான
குப்பைகள் தனியாகவும் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் உத்தரவுப்படி, 10க்கும் மேற்பட்ட துாய்மை மேற்பார்வையாளர்கள் முன்னிலையில், 131 துாய்மை பணியாளர்கள், கிருஷ்ணகிரி நகரில் கடந்த, 2 நாட்களில் சேர்ந்த, 30 டன் பட்டாசு குப்பையை சேகரித்து, நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அகற்றி, அதை நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்து சென்றுள்ளனர்.