/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜல்லி கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
ஜல்லி கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : மே 09, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள், ஓசூர் அடுத்த ஆலுாரில் உள்ள சென்னை மைன்ஸ் நிறுவனம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒரு யூனிட் ஜல்லி கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர்.