/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விபத்தில் டிப்பர் லாரி டிரைவர் பலி
/
விபத்தில் டிப்பர் லாரி டிரைவர் பலி
ADDED : ஜன 13, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 26.
சூளகிரி தாலுகா, சானமாவு சூர்யா நகரில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் கிரஷரில், லாரி டிரைவராக பணியாற்றினார். நேற்று முன்தினம் நள்ளிரவு, ஓசூர் - பாகலுார் சாலையில் உள்ள சொக்கரசனப்பள்ளி ஜங்ஷன் சாலை அருகே லாரியை ஓட்டி சென்ற போது, மற்றொரு டிப்பர் லாரி மீது மோதினார். இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு லாரி டிரைவரான, பீகார் மாநிலத்தை சேர்ந்த மணிஷ் யாதவ் என்பவர் காயமடைந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.