/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிப்பர் லாரி - தனியார் நிறுவன பஸ் மோதல் டிரைவர் பலி; 15 ஊழியர்கள் படுகாயம்

ADDED : மார் 13, 2024 02:15 AM
ஓசூர்:கெலமங்கலம்
அருகே டிப்பர் லாரி மற்றும் தனியார் நிறுவன பஸ் மோதியதில், லாரி
டிரைவர் பலியான நிலையில், 15 ஊழியர்கள் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், கெலமங்கலம் அடுத்த கூத்தனப்பள்ளி அருகே, டாடா
எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு,
பணி முடிந்த, 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களை
ஏற்றிக்கொண்டு, ஓசூர் நோக்கி அந்நிறுவன பஸ் சென்றது. ராயக்கோட்டை
- கெலமங்கலம் சாலையிலுள்ள அனுசோனை அருகே இரவு, 11:30 மணிக்கு
சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரியும், தனியார் நிறுவன பஸ்சும்
நேருக்கு நேர் மோதின.
இதில், லாரி டிரைவரான பீஹார் மாநிலத்தை
சேர்ந்த லால்குமார், 35, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ்சில் வந்த, 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்து, ஓசூர்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கெலமங்கலம்
போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி,
போக்குவரத்தை சீரமைத்து விசாரித்து வருகின்றனர்.