/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரண்டாவது நாளாக டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்: 220 ஆசிரியர்கள் கைது
/
இரண்டாவது நாளாக டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்: 220 ஆசிரியர்கள் கைது
இரண்டாவது நாளாக டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்: 220 ஆசிரியர்கள் கைது
இரண்டாவது நாளாக டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்: 220 ஆசிரியர்கள் கைது
ADDED : ஜூலை 19, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை எதிரில், டிட்டோ ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், இரண்டாவது நாளாக நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாரப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ், டிட்டோ ஜாக் நிதி காப்பாளர் சேகர், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 220 ஆசிரியர்களை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுதலை செய்தனர்.