/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்-4' மாதிரி தேர்வு

ADDED : ஏப் 30, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், கடந்த, 22 முதல் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 4' தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமையில் நேற்று நடந்த மாதிரித்தேர்வில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 4' போட்டி தேர்வுக்கு தயாராகும், 135 தேர்வர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 4' மற்றும் எஸ்.ஐ., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகின்றன.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கூறுகையில், ''இப்பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு, ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நடத்தப்படுகிறது. தேர்வர்கள் வசதிக்காக இந்த அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில், 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நுாலகம் மற்றும் பயிலகம் இயங்கி வருகிறது. மேலும், வீட்டில் இருந்தோ, வேறு இடங்களிலோ டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 4' போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் இந்த அலுவலகத்தில் நடக்கும் மாதிரி தேர்வுகளை எழுதலாம். இந்த அலுவலகம் மூலம், 9 மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று, பல அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்,'' என்றார்.