/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
/
வெள்ளி விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
ADDED : ஜன 02, 2025 01:13 AM
பரிசு வழங்கல்
கிருஷ்ணகிரி, ஜன. 2-
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நுாலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், திருவள்ளுவர்சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, 9 மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 7 நுாலகர்களுக்கு சொந்த நுாலகங்களுக்கு விருதுக்கான கேடயங்களும், ஒரு நுாலகருக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், 4 நுாலகர்களுக்கு மாநில அளவில் அதிக உறுப்பினர்களை சேர்த்ததற்கான விருதும்  கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, சி.இ.ஓ., முனிராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

