ADDED : ஜூலை 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, நல்லகானகொத்தப்பள்ளி வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிராக்டரில் சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ஒரு யூனிட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது.
கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். சூளகிரி அருகே நஞ்சாபுரத்தை சேர்ந்த டிரைவர் குமார், 24, மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

