/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரண்டு பைக் மோதி வியாபாரி பரிதாப பலி
/
இரண்டு பைக் மோதி வியாபாரி பரிதாப பலி
ADDED : மே 05, 2025 02:35 AM
ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை வெள்ளக்குட்டை பகுதியில், இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, வெங்கடத்தாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரி சென்னையன், 55, இவர் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் துணி வியாபாரம் முடித்து விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், 33, என்பவர் பைக்கில் அதிவேகமாக வந்து நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில், பலத்த காயம் அடைந்த சென்னையனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து
சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.