தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வியாபாரிகள் போராட்டம் 297 பேர் மீது வழக்கு

வியாபாரிகள் போராட்டம் 297 பேர் மீது வழக்கு

வியாபாரிகள் போராட்டம் 297 பேர் மீது வழக்கு


ADDED : நவ 12, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் இயங்குகிறது. இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பால பணி நடக்கிறது.

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு, பத்தலப்பள்ளி மார்க்கெட்டை மூட, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுடன், மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்கெட்டிற்கான உரிமத்தை புதுப்பிக்கக்கோரியும், பத்தலப்பள்ளி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன், நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. அனுமதி வழங்கப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, ஓசூர் வி.ஏ.ஓ., தண்டபாணி, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, பத்தலப்பள்ளி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் நாராயணப்பா, 56, செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ராஜாரெட்டி மற்றும் 5 பெண்கள் உட்பட, 297 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us