sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகளிர் தினத்தையொட்டி மரபு நடை பயணம்

/

மகளிர் தினத்தையொட்டி மரபு நடை பயணம்

மகளிர் தினத்தையொட்டி மரபு நடை பயணம்

மகளிர் தினத்தையொட்டி மரபு நடை பயணம்


ADDED : மார் 31, 2025 01:59 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மகளிர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்-காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து மர-புநடை பயணம் மேற்கொண்டனர்.

மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், மரபு நடை பயணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

சி.இ.ஓ., (பொ) முனிராஜ், கலெக்டரின் நேர்முக

உதவியாளர் சர்தார் உடனிருந்தனர்.

முதல் பயணமாக, வரலாற்று ஆய்வுக்குழு கண்டறிந்த சென்-னானுார் அகழாய்வு தளத்திற்கு, தேர்வுத்துறை இணை இயக்-குனர் மகேஷ்வரி தலைமையில் சென்றனர்.

அங்கு, அகழாய்வில் கிடைத்த ஏர்கலப்பை நுணி, தமிழி எழுத்-துள்ள பானை ஓடுகள், நுண் கருவிகள், பானை ஓடுகள் பற்றி விளக்கி கூறினர். பின்னர், கந்திகுப்பம் பைரவர் கோவிலில் சோழர், பல்லவர், விஜயநகரர், ஒய்சாளர் கால கட்டடக்கலை-களில் சிறந்தவற்றை ஒருங்கிணைத்து கட்டி வரும் கோவிலை பார்வையிட்டனர். பின்னர், 125 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்-டப்பட்ட ரோமானிய கட்டடக்கலையில் உருவாக்கப்பட்ட, துாய அடைக்கல மாதா ஆலயத்தை பார்வையிட்டு திருப்பினர்.

இதில், காப்பாட்சியர் சிவக்குமார், முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வர-லாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்-செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us