/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஓசூர் நகரில் போக்குவரத்து மாற்றியமைப்பு
/
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஓசூர் நகரில் போக்குவரத்து மாற்றியமைப்பு
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஓசூர் நகரில் போக்குவரத்து மாற்றியமைப்பு
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஓசூர் நகரில் போக்குவரத்து மாற்றியமைப்பு
ADDED : மே 13, 2025 02:27 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை இன்று நடக்கிறது. கடந்த மாதம், 29 ம் தேதி காப்பு கட்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள், இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகு குத்தியும், காவடி எடுத்து கிரேனில் தொங்கியபடியும் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வருவர்.
அதுமட்டுமின்றி, சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். அதனால், ஓசூர் நகரில் சில இடங்களில் சாலைகள் தடுக்கப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, ராமநாயக்கன் ஏரிக்கரை சாலை முழுவதுமாக இன்று ஒரு நாள் மூடப்படுகிறது.
அதேபோல், தளி செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் பஸ் டிப்போ முன் உள்ள சாலையிலும், வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
ஏரித்தெரு, பழைய பெங்களூரு சாலை, காந்தி சிலை, நேதாஜி ரோடு, அமேரியா பெட்ரோல் பங்க் முதல் அசோக் பில்லர் வரையுள்ள ராயக்கோட்டை சாலை ஆகியவற்றிலும், வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை செல்லும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் சீத்தாராம்மேடு சென்று, அங்கிருந்து ரிங்ரோட்டில் பயணித்து, தேன்கனிக்கோட்டை அல்லது தளி சாலையை அடைந்து, அங்கிருந்து செல்ல போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர். நகர் முழுவதும்,
200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.