/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
/
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து நெரிசல்; ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்
ADDED : பிப் 01, 2025 06:53 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஐந்துரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்த-ரவிட்டதையடுத்து நேற்று சாலையோர கடை ஆக்கிரமிப்புகள், நடைபாதை கடைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட ஐந்துரோடு ரவுண்டானா, சென்னை சாலை, பழைய சப்ஜெயில் ரோடு, காந்திரோடு உள்-ளிட்ட பகுதிகளிலும், நெடுஞ்சாலை பகுதிகளிலும் ஆக்கிரமிப்-புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் சென்றன. இதை விசாரித்த கிருஷ்ணகிரி, ஆர்.டி.ஓ., ஷாஜகான், ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் சரயுவுக்கு அனுப்பினார்.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு நக-ராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரி ஐந்து-ரோடு பஸ் ஸ்டாப், பழைய சப் - ஜெயில் ரோடு, சேலம் ரோடு பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகள் மற்றும் சாலையோர கடை ஆக்கிரமிப்புகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றினர்.
இது குறித்து நகரமைப்பு ஆய்வாளர் மலர்விழி கூறுகையில், ''கலெக்டர் உத்தரவையடுத்து இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது, தொடர்ந்து காந்திசாலை, பெங்க-ளூரு சாலை, சென்னை சாலை உள்ளிட்டவற்றிலும் ஆக்கிரமிப்-புகள் அகற்றும் பணி தொடரும்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் (பொ) கணேஷ், சுகாதார மேற்பார்வையா-ளர்கள் தனலட்சுமி, செல்வம், சரவணன் மற்றும் நெடுஞ்சாலைத்-துறை ஆர்.ஐ.,க்கள் ரமேஷ், மாதவராஜ், புனிதா, ராமமூர்த்தி உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.