/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

ADDED : ஜன 02, 2024 10:45 AM
ஓசூர்: ஓசூர், ஜூஜூவாடி அருகே, சிப்காட் ஜங்ஷன் பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த அக்., மாதம், 22 கோடி ரூபாய் மதிப்பில், 800 மீட்டர் துாரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பெங்களூரு - கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை தோண்டி, பில்லர் அமைக்கும் பணிகள்
நடக்கின்றன.
இதனால், சிப்காட் ஜங்ஷன் பகுதியில், சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அதனால், அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த இரு நாட்களாக பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், நேற்று கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி டோல்கேட்டில் இருந்து, ஓசூர் சிப்காட் ஜங்ஷன் வரை, தேசிய நெடுஞ்சாலையில், 3 கி.மீ.,க்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.