/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு 4 கி.மீ., துாரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

ADDED : டிச 22, 2024 03:36 AM
ஓசூர்: ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பேரண்டப்-பள்ளியில், நேற்று வாகன போக்கு வரத்து பாதித்து, 4 கி.மீ., துாரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கர்நாடகா மாநிலத்தில் துவங்கி, தமிழக எல்லையான ஓசூர் வழி-யாக, கிருஷ்ணகிரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் ஒரு லட்சம் வாகனங்களுக்கும் மேல் சென்று வருகின்றன. இச்சாலையில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து, ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், 6 இடங்-களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு அக்.,ல் துவங்கி மந்தகதியில் நடக்கிறது.
அதேபோல், பேரண்டப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டிற்கான மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, பில்லர் அமைக்கும் பணியால், அந்த வழி-யாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர்.
நேற்று பேரண்டப்பள்ளியில் இருந்து கோபசந்திரத்தில் உயர்-மட்டம் மேம்பாலம் அமைக்கும் பகுதி வரை, 4 கி.மீ., துாரத்-திற்கு மேல், வாகனங்கள் அணிவகுத்தன. ஒரிரு நிமிடத்தில் கடக்க வேண்டிய அப்பகுதியை, 20 நிமிடங் களுக்கு மேலா-னதால், வாகன
ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல், தமிழக எல்லை-யான ஜூஜூவாடியில் துவங்கி, சிப்காட் ஜங்ஷனில் மேம்பால பணி நடப்பது வரை, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, பால பணிகளை விரைந்து முடிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.