/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காய்கறி பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி வகுப்பு
/
காய்கறி பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி வகுப்பு
காய்கறி பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி வகுப்பு
காய்கறி பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி வகுப்பு
ADDED : மார் 31, 2025 01:59 AM
கிருஷ்ணகிரி: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக, பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் வேளாண் பூச்சியியல் துறை மற்றும் கிருஷ்ண-கிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து, ஒரு நாள் பயிற்சி வகுப்பை, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தின. கோவை வேளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர், பேராசிரியர் மற்றும் தலைவர் அனீஷா ராணி ஆகியோர் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன் பேசினர். உதவி பேராசிரியர் அழகர், காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகள் மேலாண்மை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் கோவிந்தன், காய்கறி பயிர்-களை தாக்கும் நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் சசிகுமார், கத்தரி மற்றும் தக்காளி வயல்களில் பூச்சி மேலாண்மைக்கான செயல்விளக்கம் அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, மஞ்சள் நிற ஒட்டும் பொறி, இனக்கவர்ச்சி பொறி, உயிர் எதிர் கொல்லி மற்றும் வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லிகள் வழங்கப்பட்டன. பயிற்சியில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சசி-குமார் நன்றி கூறினார்.