/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
/
கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 08, 2024 07:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது. கல்வி மாவட்ட என்.ஜி.ஓ., ஒருங்கிணைப்பாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மகேந்திரன் வரவேற்றார். பையூர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் கோவிந்தன், எலுமிச்சங்கிரி அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ் பாபு, சமூக வனவியல் மற்றும் விரிவாக்க அலுவலர் சிவகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ் ஆகியோர் பேசினர்.
டி.இ.ஓ., ராஜன் பேசுகையில்,''மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் என்றால் என்ன, அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்க வேண்டும். நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரை சுத்தமாக சேமிக்க வேண்டும். உரம் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை பாதுகாக்க வேண்டும். நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுவதை மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்,'' என்றார்.இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டன.