/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேலைவாய்ப்பு திறன் வளர்க்க பயிற்சி
/
வேலைவாய்ப்பு திறன் வளர்க்க பயிற்சி
ADDED : பிப் 28, 2024 02:28 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை,
அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், வேலைவாய்ப்பு துறை சார்பில், அனைத்து
துறை சார்ந்த, 3ம் ஆண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை வளர்த்து கொள்ள,
பயிற்சி வகுப்புகள், 3 பிரிவாக நடந்தது. மின்னணுவியல் விரிவுரையாளர்
மூர்த்தி வரவேற்றார்.
கல்லுாரி பொறுப்பு முதல்வர் விஜயன் தலைமை
வகித்தார். தனியார் நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பை ஜே.சி.,
அமைப்பை சார்ந்த முகம்மது பாஷா, அரசு பணிக்கு செல்வோருக்கான
வழிகாட்டுதல்களை நெடுஞ்சாலைத்துறை அலுவலர் பிரபு, தொழில் முனைவோருக்கு
தேவையான வழிகாட்டுதல்களை பூபாளம் நிறுவன மேலாளர் கவுசிக் ஆகியோர் விளக்கி
பேசினர்.
இதில், கல்லுாரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை மின்னணுவியல் விரிவுரையாளர் ஏழுமலை செய்திருந்தார்.

