/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுதந்திர தின விழாவையொட்டி ஓசூரில் ரயில்களில் சோதனை
/
சுதந்திர தின விழாவையொட்டி ஓசூரில் ரயில்களில் சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி ஓசூரில் ரயில்களில் சோதனை
சுதந்திர தின விழாவையொட்டி ஓசூரில் ரயில்களில் சோதனை
ADDED : ஆக 14, 2025 01:33 AM
ஓசூர், ஓசூரில், சுதந்திர தின விழாவையொட்டி, ரயில்கள் மற்றும் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனை கடந்து தினமும், 8 பயணிகள் ரயில், 14 எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 2 வந்தே பாரத் ரயில்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் ரயில்வே ஸ்டேஷனை பயன் படுத்தி வருகின்றனர். சுதந்திர தின விழா நாளை (ஆக.15) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக எல்லையில், ஓசூர் நகரம் உள்ளதால், இவ்வழியாக செல்லும் மொத்தம், 24 ரயில்களில், ஓசூர் ரயில்வே பெண் எஸ்.ஐ., சமாதானம் மற்றும் போலீசார் நேற்று முதல் சோதனையை துவங்கி உள்ளனர்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின் தான் அனுமதிக்கப் படுகின்றனர். ஸ்டேஷனுக்கு வரும் ரயில்களில், பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு படையினரும், தனியாக சோதனை செய்கின்றனர். இதுதவிர, கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடி, பூனப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ்., கம்பெனி, கக்கனுார் உட்பட பல்வேறு சோதனைச்சாவடிகளிலும் நேற்று, வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.