/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி சிட்கோவின் அவலம் கழிவுநீர் குட்டையில் டிரான்ஸ்பார்மர்
/
கிருஷ்ணகிரி சிட்கோவின் அவலம் கழிவுநீர் குட்டையில் டிரான்ஸ்பார்மர்
கிருஷ்ணகிரி சிட்கோவின் அவலம் கழிவுநீர் குட்டையில் டிரான்ஸ்பார்மர்
கிருஷ்ணகிரி சிட்கோவின் அவலம் கழிவுநீர் குட்டையில் டிரான்ஸ்பார்மர்
ADDED : பிப் 07, 2024 11:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில், சிட்கோ உள்ளது. கடந்த, 1965ல் அப்போதைய தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமனால் கிருஷ்ணகிரி சிப்காட் தொடங்கப்பட்டது. இந்த வளாகத்திற்குள், 50க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த, 2014 வரை தொழிற்சாலைகளுக்கு சிட்கோ தண்ணீர் வழங்கியது. அதன்பின் தண்ணீர் வழங்கவில்லை. மாறாக தண்ணீர் வழங்கிய கிணறு பாழானது. மேலும் இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாமல், பல இடங்களில் மூடி கிடக்கிறது. இதனால், கழிவுநீர் வெளியேற வாய்ப்பின்றி தேங்கி, தண்ணீர் வழங்கிய கிணறு கழிவுநீர் கிணறாக மாறியுள்ளது.
சிட்கோ அலுவலகம் பின்புறம் மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகில் ஒன்றரை அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதன் நடுவே சிட்கோவுக்கு, மின் இணைப்பு கொடுக்கும் டிரான்ஸ்பார்மர் உள்ளது. மேலும், சிட்கோவில் வீதிகள் தோறும் தேங்கி கிடக்கும் குப்பை, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் உள்ளிட்ட விதிமீறல்களும் நடந்துள்ளதாகவும், முறையான பராமரிப்பே இல்லை எனவும், அப்பகுதியில் தொழில் முனைவோர் கூறுகின்றனர்.
கிருஷ்ணகிரி சிட்கோவின், பெரும்பகுதி நகராட்சியிலும் மீதமுள்ள பகுதி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்திலும் வருகிறது. எனவே, இதை யார் பராமரிப்பது என்பதில் போட்டா போட்டி நடந்து வருவதாகவும், அடிப்படை வசதியின்றி தவிக்கும் சிறு தொழிற்சாலைகளையும், புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தண்ணீர் வசதி, தெருவிளக்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது.

