ADDED : ஜூலை 05, 2025 01:20 AM
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் மகன் ரோகித், 13, கொலை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின், மாவட்ட கூடுதல் எஸ்.பி., சங்கர் தலைமையில், 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், மாவனட்டி கிராமத்திற்கு மாணவன் சடலம் நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், மாணவன் சடலம் அவர்களது நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, மாணவனுடன் படித்த சக மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என, 20க்கும் மேற்பட்டோர், கண்ணீர் அஞ்சலி என்ற துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தியவாறு வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல், மாவனட்டி கிராமத்தை சேர்ந்த ஒட்டு மொத்த மக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இது காண்போரை கண் கலங்க வைத்தது.