/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,விற்கு கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை கொண்டு வர முயலுங்கள்'
/
அ.தி.மு.க.,விற்கு கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை கொண்டு வர முயலுங்கள்'
அ.தி.மு.க.,விற்கு கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை கொண்டு வர முயலுங்கள்'
அ.தி.மு.க.,விற்கு கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை கொண்டு வர முயலுங்கள்'
ADDED : நவ 17, 2024 02:16 AM
கிருஷ்ணகிரி, நவ. 17-
''கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை, அ.தி.மு.க., வில் இணைக்க நிர்வாகிகள் பாடுபட வேண்டும்,'' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி
எம்.எல்.ஏ., பேசினார். கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், துணை பொதுச்செயலாளர் முனுசாமி பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு பயன்தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வீடு, வீடாக சென்று எடுத்து கூற வேண்டும். தெருமுனை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அந்தந்த பகுதி ஒன்றிய செயலாளர்கள் இதற்கு வழிவகுக்க வேண்டும். உறுப்பினர் அட்டை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியிலுள்ள, 309 ஓட்டுச்சாவடிகளுக்கும் பூத் வாரியாக, 9 பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலில், கல்லுாரி மாணவர்கள், இளம் வாக்காளர்களை, அ.தி.மு.க.,வில் சேர்க்க முழு முயற்சி மேற்கொள்வதோடு, அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள், பயன்கள் குறித்து, தெளிவாக விளக்கி, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.