/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'துளிர்' திறனறிதல் தேர்வு: மாநகராட்சி பள்ளிக்கு பாராட்டு
/
'துளிர்' திறனறிதல் தேர்வு: மாநகராட்சி பள்ளிக்கு பாராட்டு
'துளிர்' திறனறிதல் தேர்வு: மாநகராட்சி பள்ளிக்கு பாராட்டு
'துளிர்' திறனறிதல் தேர்வு: மாநகராட்சி பள்ளிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 23, 2025 01:18 AM
ஓசூர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறை அனுமதியுடன், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'துளிர்' திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டு நடந்த தேர்வில், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 4 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 250 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.
ஓசூர் கல்வி மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் திறனறிதல் தேர்வில் பங்கேற்ற பள்ளி என்ற பெருமையை, பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றது.
அதனால், அப்பள்ளிக்கு நேற்று நிறைவு பெற்ற, 14வது புத்தக திருவிழாவில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதை, தலைமையாசிரியர் பொன்நாகேஷ் பெற்றுக் கொண்டார்.