/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா
/
துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED : ஆக 07, 2024 06:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியிலுள்ள துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 3 ல் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டுடன் துவங்கியது.
தொடர்ந்து, 5 ல் காலை, பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக கொண்டு சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, செந்தில் நகர், சீனிவாசா காலனி, திருவண்ணாமலை ரோடு, பாரதியார் தெரு, விநாயக முதலி தெரு, தேர்நிலையத்தெரு, ராசுவீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள், கரகத்துடன் ஊர்வலமாக கூழ் கொண்டு சென்று அம்மனுக்கு படைத்தனர். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (ஆக.7) காலை, 8:00 மணிக்கு, அம்மன் ஊர்வலமும், மதியம், 2:00 மணிக்கு, அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், மாலை, 4:00 மணிக்கு, அம்மன் வீதி உலா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை துளுக்காணி மாரியம்மன் கோவில், ராமர் கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.