தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஜி.ஹெச்., டாக்டரை போதையில் தாக்கிய இருவர் கைது

ஜி.ஹெச்., டாக்டரை போதையில் தாக்கிய இருவர் கைது

ஜி.ஹெச்., டாக்டரை போதையில் தாக்கிய இருவர் கைது


ADDED : ஜூலை 03, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்திலுள்ள, சேலம் சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் போதையில் தள்ளாடிய-படி பைக்கில், 3 வாலிபர்கள் வந்துள்ளனர். பைக்கிலிருந்து விழுந்து உடலில் மண்ணாக இருந்த அவர்களை, அங்கு பணியி-லிருந்த செவிலியர்கள் மருத்துவமனைக்குள் வர கூறியுள்ளார்.

போதையில் தள்ளாடியவர்கள், 'அதெல்லாம் முடியாது ஸ்டெக்சர் எடுத்து வா' எனக்கூறி, திட்டி உள்ளனர். மூவரும் சேர்ந்து கத்தியதால், பணியிலிருந்த டாக்டர் சந்தோஷ்குமார் வெளியே வந்து, 'நீங்கள் யார், என்ன பிரச்னை' எனக்கேட்-டுள்ளார். 'ஓ, என்னையே யார் என கேட்கிறியா. நான் யார் தெரி-யுமா' எனக்கேட்டு, டாக்டரை மூன்று வாலிபர்களும் சேர்ந்து தாக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து, டூவீலரில் தப்ப முயன்ற அவரின், மூக்கு, முதுகில் தாக்கி உள்ளனர். அப்போது பணியிலிருந்த ஊழியர்கள் வந்து, வாலிபர்களை பிடித்துள்ளனர். இரு வாலிபர்கள் தப்பிய நிலையில், போதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் அங்கேயே விழுந்துள்ளார். அவரை, காவேரிப்-பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர், பாறைகொட்டாயை சேர்ந்த ராகுல், 23, என்பதும், அவருடன் இருந்தவர்கள் நெக்குந்தியை சேர்ந்த தினேஷ்குமார், 24 மற்றும் சக்திவேல் என தெரிந்தது. நேற்று முன்-தினம் இரவு, ராகுலை கைது செய்த போலீசார், நேற்று தினேஷ்கு-மாரை கைது செய்து, சக்திவேலை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us