/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது
/
5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது
ADDED : ஆக 12, 2024 06:40 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள் தலைமையிலான தனிப்படையினர், ஓசூர் ஜூஜூவாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி அருகில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட, 2 பைகளில் மொத்தம், 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தியவர் மனோகர், 44, என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆனேக்கல்லை சேர்ந்தவர் என தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, ஓசூர் மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி, தர்கா, கணபதி நகர், அரசனட்டியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆனேக்கல் ஆச்சாரியா வீதியிலுள்ள கோபால் என்பவருக்கு கொடுப்பதாக தெரிவித்தார். அவரது வீட்டிற்கு சென்று போலீசார் அங்கு, 4,900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியதை கண்டு பிடித்து, மனோகர், கோபால் ஆகிய இருவரையும் கைது செய்து, 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.