ADDED : செப் 22, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த டியோ ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலத்திலிருந்து, 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 20 பாக்கெட் மதுபானம் ஆகியவற்றை கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால், ஸ்கூட்டரை ஓட்டி வந்த, ஓசூர் பத்தலப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில்கோர், 25, சந்தோஷ் ராய், 45, ஆகிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 19,820 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.