/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.7 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
/
ரூ.7 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ரூ.7 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ரூ.7 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ADDED : ஜூலை 28, 2025 04:19 AM
ஓசூர்: ஓசூர் வழியாக நுாதன முறையில், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திய இருவர் கைது செய்யப்பட்-டனர்.
ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று மாலை, சிப்காட் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்-வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன. பெங்களூருவில் இருந்து வீட்டை காலி செய்து, துாத்துக்குடிக்கு பொருட்களை எடுத்து செல்வதாக டிரைவர் தெரிவித்தார். சந்தேகத்தின் பேரில், வாகனத்தில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களில் சோதனை செய்த போது, 710 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
கர்நாடகாவில் இருந்து, துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகு-திக்கு கடத்தி செல்வது தெரிந்தது. வாகனத்தை ஓட்டி வந்த, துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த டிரைவர் மலையரசன், 36, கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த சரவணகுமார், 30, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.