/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா கடத்தல் இரு கார் டிரைவர்கள் கைது
/
ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா கடத்தல் இரு கார் டிரைவர்கள் கைது
ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா கடத்தல் இரு கார் டிரைவர்கள் கைது
ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா கடத்தல் இரு கார் டிரைவர்கள் கைது
ADDED : ஆக 09, 2025 01:50 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரியில் உள்ள தனியார் வங்கி அருகே, நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மகேந்திரா மராஸ்சோ காரை நிறுத்தி சோதனை செய்த போது, 5.88 லட்சம் மதிப்புள்ள, 314 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும், 2,686 ரூபாய் மதிப்புள்ள, 96 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது.
இதனால் காரை ஓட்டி வந்த, கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே கட்டளை பகுதியை சேர்ந்த அருண்குமார், 22, என்பவரிடம் போலீசார் விசாரித்த போது, கர்நாடகாவில் இருந்து, சேலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், காருடன் மதுபானம், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார், பாகலுார் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன் நடத்திய வாகன சோதனையில், அவ்வழியாக வந்த வெர்னா காரில், கர்நாடகாவில் இருந்து, திருவண்ணாமலைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானத்தை கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால் காரை ஓட்டி சென்ற, திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாம்பாளையத்தை சேர்ந்த இளையகுமார், 29, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 22,000 ரூபாய் மதிப்புள்ள, 44.5 கிலோ புகையிலை பொருட்கள், 2,240 ரூபாய் மதிப்புள்ள, 28 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.