/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரு சிறுமியர் பலி
/
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரு சிறுமியர் பலி
ADDED : ஏப் 15, 2025 05:50 AM

ஒகேனக்கல் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ராம்நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது உறவினர் பெங்களூரு, சர்ஜாபூரை சேர்ந்த சென்னப்பன். பள்ளி விடுமுறை என்பதால், இரண்டு குடும்பத்தாரும் டாடா சுமோ காரில், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.
பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தவர்கள், தடை செய்யப்பட்ட ஆலம்பாடி காவிரியாற்று பகுதியில் குடும்பத்தோடு, மதியம் 3:00 மணியளவில் குளித்தனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவியான முத்தப்பா மகள் பக்கியலட்சுமி, 10; பத்தாம் வகுப்பு படிக்கும் சென்னப்பா மகள் காவியா, 16. இருவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர்.
இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இருவரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் உதவியோடு, சிறுமியர் சடலத்தை மீட்டனர். ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.