/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் -- வேன் விபத்தில் இருவர் பலி
/
பைக் -- வேன் விபத்தில் இருவர் பலி
ADDED : ஜூலை 26, 2025 10:41 PM

ஊத்தங்கரை:பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதிய விபத்தில், தேங்காய் வியாபாரிகள் இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் , பர்கூர் அடுத்த தம்மகவுண்டனுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 28. இவரது நண்பர் திருப்பத்துார் மாவட்டம், தோக்கியத்தை சேர்ந்த லட்சுமணன், 27. தேங்காய் வியாபாரிகளான இருவரும், நேற்று முன்தினம் சேலத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்த பணத்தை வாங்க, யமஹா எப்சட் பைக்கில் சேலம் சென்று விட்டு ஊர் திரும்பினர்.
இரவு, 10:00 மணியளவில், ஊத்தங்கரை, வீரியம்பட்டி கூட்ரோடு அருகே, கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவ்வழியாக கடலுார் நோக்கி சென்ற மஹிந்திரா டூரிஸ்ட் வேன், பைக் மீது மோதியது.
பிரகாஷ் உயிரிழந்தார். படுகா யமடைந்த லட்சுமணன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். டூரிஸ்ட் வேன் டிரைவர் தட்சிணாமூர்த்தியிடம் 31, ஊத்தங்கரை போலீசார் விசாரிக் கின்றனர்.