/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் பஸ் மோதி இருவர் பலி பஸ்களின் கண்ணாடி உடைப்பு
/
தனியார் பஸ் மோதி இருவர் பலி பஸ்களின் கண்ணாடி உடைப்பு
தனியார் பஸ் மோதி இருவர் பலி பஸ்களின் கண்ணாடி உடைப்பு
தனியார் பஸ் மோதி இருவர் பலி பஸ்களின் கண்ணாடி உடைப்பு
ADDED : செப் 21, 2024 03:11 AM
ஓசூர்: கெலமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்த-மான பஸ் மோதி இருவர் பலியாகினர். இதனால் ஆத்திரம-டைந்த மக்கள், எட்டுக்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடி-களை உடைத்து சேதப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்-ளியை சேர்ந்தவர் குமார், 40, மேஸ்திரி; அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கணேஷ், 50; இருவரும் நேற்றிரவு, 10:15 மணிக்கு, கெலமங்கலத்தில் இருந்து ஊருக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர்.
கெலமங்கலம் கூட்ரோட்டில் சென்றபோது, ஓசூரில் இருந்து வன்னியபுரம் அருகே உள்ள டாடா எலக்ட்-ரானிக்ஸ் நிறுவனத்துக்கு
தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் பைக் மீது மோதியது. இதில் கணேஷ் துாக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்; குமார்
பைக்குடன் பஸ்சில் சிக்கி சில அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். குமார் சம்பவ இடத்தி-லேயே பலியானார்.
படுகாயமடைந்த கணேஷ் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்த போடிச்சிப்பள்ளி பகுதி மக்கள், இருவரின் உறவி-னர்கள் ஒன்றிணைந்து, எட்டுக்கும் மேற்பட்ட டாடா எலக்ட்-ரானிக்ஸ்
பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.
கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதித்தது. கெலமங்கலம் போலீசார் விபத்தில் சிக்-கிய வாகனங்களை
அப்புறப்படுத்தினர்.